வேதாளம்’ படத்தில் இறங்கி அடித்த அஜீத்!

veஅஜீத் நடித்த வேதாளம்’ படம் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இன்று காலை ஜெயா டிவியில் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஸ்ருதிஹாசன் ஆகியோர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வேதாளம் படத்தின் கதையை அஜீத்தை மனதில் வைத்தே தான் எழுதியதாகவும், அந்த படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜ், மேனரிசம் ஆகியவற்றை முழு அளவில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் சிவா கூறியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படியான ஒரு படம் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இந்த படத்தில் ‘வேதாளம்’ என்பது ஒரு தரலோக்கல் கேரக்டர் என்றும், இந்த கேரக்டரை அஜீத், இறங்கி அடித்துள்ளார்’ என்றும் கூறியுள்ளார்.

அஜீத்துடன் நடிக்கவேண்டும் என்பது தனது கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறிவிட்டது என்றும் கூறிய ஸ்ருதிஹாசன், அவருடன் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்

முதலில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத்தான் தான் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அஜீத் இந்த படத்திற்காக இரவுபகலாக பணிபுரிய ஓப்புக்கொண்டதால், தீபாவளி ரிலீஸ் தற்போது சாத்தியமாகியுள்ளதாகவும் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார்.