சூர்யா ரசிகர்களை குழப்பி விட்ட ஆர்யா!

arya-suriyaசூர்யா, ஜோதிகா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சூர்யாவின் கம்பீரமான போலீஸ் கெட்டப், ஜோதிகாவுடன் ரொமான்ஸ் காட்சிகள், கவுதம் மேனனின் ஸ்டைலிஷான இயக்கம் மற்றும் ஹாரீஸ் ஜெயராஜின் அற்புதமான பாடல்கள் ஆகியவை ஒருங்கே பெற்ற ‘காக்க காக்க’ படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்நிலையில் ‘காக்க காக்க’ படத்தில் சூப்பராக நடித்த லிட்டில் இளையதளபதி விக்ராந்துக்கு பாராட்டுக்கள்’ என ஆர்யா நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சற்று நேரத்தில் தனது தவறை திருத்திக்கொண்ட ஆர்யா, விக்ராந்த் நடித்த ‘தாக்க தாக்க’ படம் என்று பதிவு செய்வதற்கு பதிலாக ‘காக்க காக்க’ என்று பதிவு செய்துவிட்டதாக தனது தவறை ஒப்புக்கொண்டார். அதன்பின்னரே பரபரப்பு அடங்கியது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக ரீஎண்ட்ரி ஆகியுள்ள விக்ராந்துக்கு இந்த படம் பெரும் திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ராந்தின் நண்பர்களான ஆர்யா, விஷால், மற்றும் விஷ்ணு ஆகியோர் இந்த படத்தின் ஒரு பாடலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.