உனக்கென்ன வேணும் சொல்லு!

unakke“அனைவருக்கும் பரீட்சையமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பு படத்திற்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். குழந்தை பெற இயலாத ஒரு படித்த இளம் பெண்ணை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதால் அவள் படும் வேதனையும், வலியையும் அமானுஷ்ய சக்திகளின் பின் புலத்தில்கூறி உள்ளோம். .

ஆகஸ்ட் மாதம் இறுதியில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது. படத்தை பிரமாண்டமாக வெளியிடும் Auraa Cinemas நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.” எனக் கூறினார் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’(டெய்சி) இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூறினார்.