சண்டைக்கு தயாராகும் விஜய்-விஜயசேதுபதி!

மாநகரம், கைதி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர். விஜய்யின் 64வது படமான இந்த படத்தில் விஜயசேதுபதி வில் லனாக நடிக்கிறார். இந்தப்படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களில்  விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜயசேதுபதியும் ரத்தம் வழிந்த நிலையில் மோதிக்கொள்வது போன்ற போஸ்டர் வெளியாகி பெரும் புயலை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் நடிக்கும் அந்த சண்டை காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை.

இந்தநிலையில், அவர்கள் நடிக்கும் அந்த அதிரடியான சண்டை காட்சி நெய்வேலியில் பிப்ரவரி மாதம் படமாகிறது. கண்ணிவெடிகளின் பின்னணியில் பிரமாண்டமாகவும், அதிரடியாகவும் அந்த ஆக்சன் காட்சி படமாக்கப்பட இருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.