100ஆவது நாளை நெருங்கும் விஜய்யின் பிகில்!

தெறி, மெர்சல் படங்களைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி திரைக்கு வந்தது.இந்த படத்தில் ராயப்பன், மைக்கேல் என விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்திருந்தார் விஜய். அவருடன் நயன்தாரா, இந்துஜா, அமிர்தாஅய்யர், ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் உள்பட பலர் நடித்தனர்.

இந்த பிகில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து படம் வெளியானது வரை அவ்வப்போது அப்டேட்களை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி.

இந்தநிலையில் இன்றோடு பிகில் படம் வெளியாகி 95 நாட்களாகி விட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் 100ஆவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, அதிக வசூல் மற்றும் சோசியல் மீடியாவில் டிரண்டிங்கான படம் விஜய்யின் பிகில்தான் என்று ஒரு செய்தியை பதிவிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், bigil 100 days என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரண்டிங் செய்து வருகிறார்கள்.