ராதாரவியுடன் மோத முடிவு செய்த சின்மயி!

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் அவரை எதிர்த்து திடீரென பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சமீபத்தில் சின்மயி நீக்கப்பட்டார் என்பதும் அதற்கு ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார் என்பதும் தெரிந்ததே. அதன்பின்னர் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது

இந்த நிலையில் தற்போது ராதாரவியை எதிர்த்து சின்மயி நேருக்கு நேராக தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இருப்பினும் டப்பிங் யூனியன் வாக்காளர் பட்டியலில் சின்மயி பெயர் இல்லை என்றும் அதனால் அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஒரு வேளை தன்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது