அதிரடி போலீசாக அதர்வா நடிக்கும் 100 !

அதர்வா -ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் 100. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம் மே 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இந்த 100 படத்தை அடுத்து கூர்கா என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.

நேற்று 100 படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடை பெற்றது. அப்போது அதரவா, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சாம் ஆண்டன் பேசுகையில், இரண்டு படங்களை காமெடி கதையில் இயக்கி விட்டு மூன்றாவதாக ஆக்சன் கதையுடன் அதர்வாவை சந்தித்தேன். அவரும் என்னை காமெடி படங்களை இயக்கியவர் என்கிற மனநிலையில் பார்க்காமல் அந்த கதையின் தன்மையை புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்தார்.

அந்தவகையில், போலீஸ் ஜானரில் எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் இந்த 100 படத்தில் அதர்வா நடித்துள்ள போலீஸ் வேடம் இன்றைய தருவாயில் மக்களுக்குத் தேவையான ஒரு கதாபாத்திரமாக இருக்கும். 100 என்கிற அவசர போன் எந்த அளவுக்கு துரிதமாக மக்களுக்கு பணியாற்றி வருகிறது என்பதை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறேன். அதனால் இந்த 100 படம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இந்த படத்திற்காக அதர்வா கூடுதலாக மெனக்கெட்டுள்ளார்.

அதேபோல் அதர்வாவும் பிட்டான உடல்கட்டுடன் கதாபாத்திரத்தை உணர்ந்து போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில், இந்த படம் அதர்வாவின் கேரியரில் மெகா பட்ஜெட் படம் என்பதோடு, அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக அமைந்துள்ளது என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.