அந்தரங்க படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்காவின் கணவர்!

தமிழில் வெயில், செங்காத்து, தொலைபேசி என சில படங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இந்நிலையில், டைரக்டர் லாரன்ஸ் என்பவரை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கணவருடன் சென்னையில் குடியேறிய பிரியங்கா, 2013ல் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கேரளா சென்றவர் பின்னர் கணவருடன் இணைந்து வாழ சென்னை திரும்பவில்லை.

பின்னர், 2015ல் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பிரியங்கா, தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, தான் கணவரை பிரிந்ததற்கான காரணத்தையும் தற்போது அவர் ஒரு பேட்டியில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை கணவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டதாகவும், கணவரே இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரை தான் பிரிந்து விட்டதாக கூறியுள்ள பிரியங்கா, திருமணத்திற்கு முன்பு தொடர்ந்து தான் நடிக்க சம்மதம் சொன்ன அவர் பின்னர் நடிப்பதற்கு தடை விதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்.