அதுதான்டா கேப்டன் விஜயகாந்த்!

கேப்டன் விஜயகாந்த் ஒரு புயல் வேக அரசியல்வாதி. கருணாநிதி ஜெயலலிதாவிடம் அவர் செய்த அரசியலை வார்தைகளால் சொல்லி விட முடியாது. தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் சுனாமி, கஜா புயல்களையும் தாண்டியது.

வருவேன் என்று சொன்னார், வந்தர்ர, சாதித்தார் இதுதான் விஜயகாந்த். இப்போது அடுத்த லெவல் அரசியல்வாதியாகி விட்ட அவர், உடல்நலம் பாதிக்ப்பட்டதால் சிகிச்சை எடுத்து வருகிறார். வெகு விரைவிலேயே தன்னை ரீசார்ஜ் செய்துகொண்டு அரசியலில் ரீஎன்ட்ரி கொடுக்கப்போகிறர்ர கேப்டன்.

இந்த நேரத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள் ரஜினிகாந்தை எம்ஜிஆருடன் சிலர் ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால் அவரை விஜயகாந்துடன்கூட ஒப்பிட முடியாது. விஜயகாந்தின் புயல் வேக அரசியல் எங்கே? எதிரியே இல்லாத நேரம்பார்த்து அரசியலுக்கு வரும் ரஜினி எங்கே? என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ரஜினிகாந்த் சொடக் போட்டு பேசுவதெல்லாம் சினிமாவில் மட்டும்தான். ஆனால் விஜயகாந்த் சினிமாவில் செய்யாததையும் அரசியல் செய்து காட்டியவர். கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் இருந்தபோதே விஜயகாந்தைப்போன்று ரஜினியும் அரசியலில் இறங்கியிருந்தால் அது துணிச்சல். ஆனால் அவர்கள் இருக்கும்போது தன்னால் அரசியல் செய்ய முடியாது என்று பயந்து கொண்டிருந்தவர் ரஜினிகாந்த்.

ஆனால் விஜயகாந்தோ, எத்தனை பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. நான் முன்வச்ச காலை பின் வைக்க மாட்டேன் என்று கோதாவில் இறங்கியவர். அந்த வகையில், விஜயகாந்துடன் ரஜினியை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் இந்த ஒப்பீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.