2019ல் ஸ்ருதிஹாசன் திருமணம்?v

சங்கமித்ரா படத்தில் கமிட்டாகி வெளியேறிய ஸ்ருதிஹாசனுக்கு அதன்பிறகு சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. தனது தந்தை கமலுடன் அவர் நடித்து வந்த சபாஷ்நாயுடு படமும் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில், மீண்டும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியான போதும், தற்போதைய நிலவரப்படி ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிப்பதாக தெரியவில்லை.

அதன்காரணமாக, அவ்வப்போது தனது பாய் பிரண்டு  மைக்கேல் கோர்சலை சந்திக்க அடிக்கடி ஐரோப்பா பறந்து விடுகிறார் ஸ்ருதிஹாசன். மேலும், படவாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரைக்கு வந்து விட்ட ஸ்ருதிஹாசன், இந்த 2019 ம் ஆண்டில் பாய் பிரண்டை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டி ருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் அதற்கு  எந்த சரியான பதிலும் கொடுக்காமல்  இருந்து வந்த ஸ்ருதிஹாசன், இது உண்மையா? என்று கேள்வி கேட்பது போல் தற்போது ஒரு டுவீட் செய்துள்ளார். அவர் கொடுத்துள்ள இந்த டுவீட் டைப்பார்க்கும்போது ஸ்ருதிஹாசனின் திருமண செய்தி வதந்தி போலவே தெரிகிறது.