விஜய் மகனின் இரண்டாவது வீடியோ வெளியானது!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், வேட்டைக் காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து சிறிது நேரம் நடனமாடினார். அதையடுத்து எந்த படத்திலும் தோன்றாத அவர், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு தற்போது பிலிம் மேக்கிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் இயக்கி நடித்த ஜங்ஷன் என்ற குறும் படம் சமீபத்தில் வெளியானது. அதில் தன்னை ராக்கிங் செய்தவர்களை பழிவாங்கும் வேடத்தில் ஜேசன் சஞ்சய் நடித்திருந்தார்.

அதையடுத்து தற்போது அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த்  சங்கரை பேட்டி காண்பது போன்று இன்னொரு வீடியோவை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார் ஜேசன் சஞ்சய். அந்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாக்கிக்கொண்டிருக்கிறது.