விடுதலைப்புலி பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் கொடுக்காதது ஏன்? – மர்மம் உடைந்தது

இலங்கையில் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனபோதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவரை போன்ற முகசாயல் கொண்ட நபரில் உடம்பை காண்பித்து அது பிரபாகரன் என்று இலங்கை அரசு உலகை ஏமாற்றி விட்டதாகவே தொடர்ந்து ¦ச்யதிகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அதோடு இலங்கையில் உள்ள தமிழர்களும், இறந்தவர் பிரபாகரன் இல்லை. அவரது தோற்றம் இந்த மாதிரி இருக்காது என்று கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் வெளிநாட்டில் இருந்தபடி, அடுத்த போர் ஒத்திகைக்கு திட்டம் தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும், இன்னமும் பிரபாகரன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழை வழங்க  இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதனால் இந்த செய்தி உண்மையாகவே கருதப்பட்டு வருகிறது.

மேலும், எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் மீண்டும் வரலாம் என்கிற பதட்டம் இலங்கை ராணு வத்திற்கு இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு ராணுவம் ரோந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தமிழ் அரசியல்வாதி, இலங்கையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களை மீட்க மீண்டும் பிரபாகரன் விரவில் வருவார். அப்போது நடக்கப்போவதுதான் இறுதிப்போராக இருக்கும். அந்த போரை இலங்கை அரசினால் எதிர்கொள்ள முடியாது என்று ஆவேசமாக மேடையில் பேசியிருகுகிறர்.

அதையடுத்து இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயதான மூதாட்டி, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், இன்னும் இறக்கவில்லை. அ வர் உயிரோடுதான் இருக்கிறர்ர. 2020ம் ஆண்டு கண்டிப்பாக வருவார்.  அவர் உயிரோடு இருப்பது இலங்கை அரசுக்கு நன்றாக தெரியும். ஆனால் இனிமேல் வரமாட்டார் என்று அவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக பிரபாகரன் மீண்டும் வருவார். அப்படி அவர் வரும்போது தமிழர்கள் வாழும் பகுதிகளில் முகாமிட்டிருக்கும் ராணுவத்தினர் அனைவருமே கொல்லப்படுவார்கள். அப்போது இலங்கை அரசிடம் அடிபணிந்து கிடக்கும் தமிழ்த்தேசம் விடுதலை பெறும் என்று கூறியுள்ளார்.

இப்படி சமீபகாலமாக தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மீண்டும் வருவார் என்றொரு செய்தி வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக இலங்கை அரசம் உசார் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, இலங்கை அரசு பிரபாகரனின் இறப்பு சான்றிதழை கொடுக்காததன்  பின்னணியில் ஒரு மர்மம் அடங்கியிருப்பது தெரிகிறது.