திருவாரூர் இடைத்தேர்தலில் ரஜினிகாந்த் போட்டி?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இப்போதுவரை கட்சி தொடங்குவதற்கான வேலைகளில்தான் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவ்வப்போது மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பவர் ஏதேனும் ஒரு பரபரப்பு செய்தியை சொல்லிவிட்டு மீடியாக்களை தன்னை அசை போட வைத்து வருகிறர்ர.

மேலும், விரைவில் அவர் ரஜினி டிவியை தொடங்கப் போவதாக தற்போது இன்னொரு பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த டிவியை தான் ஆரம்பிக்காமல் அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் ஒருவரை வைத்து ஆரம்பிக்கிறாராம் ரஜினி. அதற்காகத்தான் சமீபத்தில் அமெரிக்கா சென்றவர் அந்த நண்பரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறர்ர.

இந்த நிலையில், தற்போது மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந்தேதி நடக்கயிரப்பதாக தேர்தல் கமிசன் அறிவித்துள்ளது. இதனால் தங்கள் தொகுதியை விட்டுவிடக்கூடாது என்று திமுகவும், தங்களுக்கு மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிரூபித்துவிடவேண்டும் என்று அதிமுகவும் வரிந்து கட்டி நிற்கின்றன. இதற்கிடையே, டிடிவி தினகரனும் ஆர்கே நகரைப்போன்று திமுக, அதிமுகவை வீழ்த்திக்காட்டுவேன் என்று கோதாவில் குதித்திருக்கிறர்ர.

இப்படியான சூழ்நிலையில் ரஜினிகாந்தையும் இதுவும் சட்டமன்ற தேர்தல்தான். அதனால் நீங்க ளும் கட்சியை ஆரம்பித்து உங்கள் சார்பில் ஒருவரை போட்டியிட வையுங்கள் என்று அவரை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கட்சியின் பெயரை அறிவிக்கவே வருடக்கணக்கில் யோசித்துக்கொண்டி ருக் கும் ரஜினியோ, அத்தனை எளிதில் தேர்தல் களத்தில் இறக்குவதை முடிவு செய்து விடமாட்டாரல்லா? அதனால் வழக்கம்போல் யோசித்து சொல்கிறேன் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறாராம்.

ஆக, திருவாரூர் இடைத்தேர்தலில் ரஜினி கோதாவில் குதிப்பாரா? இல்லை, சின்ன மீனெல்லாம் நான் பிடிக் கமாட்டேன். அது எனக்கு அசிங்கம். நான் பிடிப்பதாக இருந்தால் திமிங்கலத்தை மட்டும்தான் பிடிப்பேன் என்று இந்த முறையும் எஸ்கேப் ஆகிவிடுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.