ரஜினியை வசைபாடிய சீமானை எச்சரித்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இதனாலேயே அவர் பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார். ஆனபோதும் அவரை தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. என் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது எனது சுபாவம். அதனால் பிரச்சினை வருகிறது என்பதற்காக இயற்கைக்கு மாறாக நடக்க நான் தயாராக இல்லை. அதனால் நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் சிம்பு.

அதோடு, சிறுவயதில் இருந்தே அவர் ரஜினிகாந்த் தீவிதமாக ரசிகர்கள். அதன்பிறகு அஜீத்தின் ரசிகரானார். இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது முதல்நாள் முதல் காட்சியை பார்க்கும் தீவிரமான ரசிகராக இருக்கிறார் சிம்பு.

அதனால் அவர்களைப்பற்றி யாராவது அவரிடத்தில் விமர்சனம் செய்தால் அவர்களை ஒரு வழி பண்ணி விடுவார் சிம்பு. அந்த வகையில், சமீபத்தில் சிம்புவிடம் ஒரு படத்திற்கான கதையை சொல்லச் சென்ற நாம் தமிழர் கட்சியின் சீமான், ரஜினிப்படங் களையும், அவரது அரசியலையும் விமர்சனம் செய்திருக்கிறார். அதைக்கேட்ட சிம்புவின் கோபம் ஜிவ் வென்று ஏறிவிட்டதாம்.

என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் என் தலைவரைப்பற்றி பேசாதீர்கள். அப்படி பேசினால் நான் நானாக இருக்க மாட்டேன் என்று சீமானிடம் எகிறியிருக்கிறார் சிம்பு.

அவரது கோபத்தைப்பார்த்த சீமான், சிம்பு ரஜினிக்கு எவ்வளவு பெரிய ரசிகன் என்பதை அப்போதுதான் புரிந்திருக்கிறார். அதையடுத்து, ரஜினியை விமர்சிப்பதை நிறுத்திய சீமான், நாம் வந்த வேலையைப்பார்ப்போம் என்று அவரிடத்தில் தனது படக்கதையை சொல்லியிருக்கிறார். கதையைக்கேட்ட சிம்புவும் ஓகேஎனக்கு பிடித்திருக்கிறது என்று அந்த ஸ்பாட்டிலேயே தனது கருத்தினை சொல்லி சீமான் இயக்கும் படத்தல் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.

ஆக, கதை சொல்லும்போதே சிம்புவின் ரியல் கேரக்டரை தெரிந்து கொண்டார் சீமான். அதனால் இனிமேல் அவரிடம் ஒருநாளும் ரஜினியைப்பற்றி வசைபாடமாட்டார். அந்த அளவுக்கு முதல் சந்திப்பை அவருக்கு போதுமான அனுபவத்தைக்கொடுத்து விட்டது.