வதந்திகளை பொய்யாக்கிய கேப்டன் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கனீர் குரலுக்கு சொந்தக்காரர். ஆனால் சமீபகாலமாக அவரக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக அவரது குரல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறர்ர விஜயகாந்த்.

ஏற்கனவே அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்த அவர், தற்போது மிண்டும் அமெரிக்காவில் சிகிசிசை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அவரது தேமுதிக அலுவலகத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அரசாங்கம் எடுப்பதால்தான் அவர் அதிகமாக பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று விட்டதாக முதலில் செய்திகள் பரவின.

அதன்பிறகு கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சீரியசாக இருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதும் அவரது மகன் விஜயபிரபாகரன் கேப்டன் நல்ல உடல்நலத் துடன் இருப்பதாகவே தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் கேப்டனைப்பற்றி வெளியான தவறான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத் தில் தற்போது அவர் அமெரிக்காவில் உற்சாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, இந்த முறை கேப்டன் நல்ல உடல்நலம் பெற்று கம்பீர குரலுடன் தமிழகம் வந்திறங்குவார் என்று தேமுதிக தொண்டர்கள் எதிர்பார்ப்பதைப்போன்று கண்டிப்பாக அவர் நல்ல உடல்நலத்துடன் வருவார் என்பது உறுதியாகியிருக்கிறது.