விஜயகாந்த் தமிழக அரசியலை மீண்டும் கலக்குவார்

கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் சமூக பிரச்சினையைப்பற்றி பேசியது. அந்த படத்தின் வெற்றிதான் முருகதாசை டோலிவுட், பாலிவுட் வரை கொண்டு சென்றது. அதனால் தனது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இப்போதுவரை மிக முக்கியமான படமாக கூறி வருகிறார் முருகதாஸ்.

ஆனால் பின்னர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து விட்டதால் அவரை வைத்து படம் இயக்கவில்லை முருகதாஸ். இருப்பினும் அதன்பிறகு தனது மனைவி, குழந்தையுடன் விஜயகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறர்ர முருகதாஸ்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தை ஒருமுறை நேரில் பார்த்த முருகதாஸ் ரொம்பவே அதிர்ச்சியடைந்து விட்டாராம். காரணம், ரமணா படத்தில் நடித்தபோது கம்பீரமாக காணப் பட்ட விஜயகாந்த், இப்போது உடல்நலம் பாதிக்கப் பட்டு சரியாக பேச முடியாமலும் இருந்ததைப்பார்த்த அவருககு ரொம்பவே வேதனையாகி விட்டதாம்.

அதுகுறித்து முரகதாஸ் கூறுகையில், ரமணா படத்தில் நடிக்க அவரிடம் கதை சொல்ல சென்றபோது நான்  சின்ன பையனாக இருந்தேன். ஆனபோதும் அவரை என் மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை. எனது  திறமையைத்தான் பார்த்தார். நான் என்ன சொல்கிறேனோ அதை உள்வாங்கி நடித்தார். அந்த வகையில் அவர் ஒரு டைரக்டர்களின் நடிகர்.

அவரும் சமூக நோக்கமுள்ள நடிகர் என்பதால், ரமணா படத்தின் கதையை உள்வாங்கி நடித்தார். அந்த நடிப்புதான் ரமணா படத்தை மெகா ஹிட் படமாக்கியது. படம் முழுக்க ஆவேசமாக நடித்திருந்தார் விஜயகாந்த்.

ஆனால் அப்படி எனர்ஜியான ஒரு மனிதர் இப்படி பாதிக்கப்பட்டிருப்பது வேதனையாக உளளது. அதனால் நான் ஒவ்வொரு நாளும் அவர் பூரண நலமடைய வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று கூறம் முருகதாஸ், கேப்டன் விஜயகாந்த் கண்டிப்பாக நலம் பெற்று தமிழக அரசியலை மீண்டும் ஒரு கலக்கு கலக்காமல் ஓயமாட்டார் என்று அடித்து சொல்கிறார்.