சர்கார் விஜய்யை விட விஸ்வாசம் அஜீத்துக்கு பிரமாண்ட கட்அவுட்!

அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படம் 2019 ஜனவரி 10-ந்தேதி பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த வகையில், விவேகத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு அஜீத்தின் அடுத்த படம் வெளியாகிறது. இதனால் விஸ்வாசம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறத

மேலும், தற்போது விஸ்வாசம் அஜீத்திற்கு தூத்துக்கு மாவட்டம் திருச் செந்தூரில் 200 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்அவுட் அமைத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். விஜய் நடித்த சர்கார் படத்திற்கு அவரது கேரளா ரசிகர்கள் 175 அடியில் கட்அவுட் வைத்த நிலையில், அதைவிட 25 அடி அதிக உயரத்தில் விஸ்வாசம் அஜீத்திற்காக அவரது ரசிகர்கள் கட்அவுட் வைக்கப்போகிறார்கள். தற்போது அந்த கட்அவுட்டை உருவாக்கும் பணிகள் தீவிரமா க நடந்து வருகிறது.