சிம்புவை இயக்கும் சீமான்!

பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இயக்குனரானவர் சீமான். அதன்பிறகு இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை இயக்கியனார். பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ள அவர், விரைவில் வெளியாக உள்ள தவம் படத்திலும் ஒரு ஆசிரியர் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தை சீமான் இயக்கயிருப்பதாக சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்தன. ஆனால் கதை பிடிக்காததால் விஜய் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது சிம்பு நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்கயிருப்பதாக சீமான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் சிம்பு டாக்டர் வேடத்தில் நடிக்கிறாராம்.

தற்போது சுந்தர்.சி இயக்கியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்து வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கிறார். அந்த படவேலைகள் முடிந்ததும் சீமான் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.