இசையமைப்பாளரை காதலிக்கும் மடோனா?

பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியன், தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பவர்பாண்டியில் நடித்தவர் தற்போது சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கமடா படத்தில் நடித்து வருகிறார். ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளப்பட இசையமைப்பாளர் ராபி ஆபிரஹாம் என்பவருடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, சிலருடன் இருக்கும்போது மட்டுமே நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படிப்பட்ட ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று பதிவிட்டுள்ளார்.

மடோனாவின் இந்த பதிவை அடுத்து ராபி ஆபிராஹாமுடன் அவரை இணைத்து இணையதளங்களில் காதல் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதையடுத்து நெட்டிசன்களின் இந்த கருத்துக்கு இதுவரை மடோனா எந்தவித மறுப்பும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.