ஜனவரியில் இந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்!

இந்தியன் படத்தை அடுத்து கமல்-ஷங்கர் இணைந்துள்ள படம் இந்தியன்-2. இந்த படத்திலும் இந்தியன் படத்தைப்போலவே இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார் கமல். அதில் இந்தியன் தாத்தா வேடம் இந்த படத்தில் இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.

மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் காஜல்அகர்வால் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டு அதன்பிறகு பொள்ளாச்சியில் நடக்கிறது. அதையடுத்து கிழக்கு ஐரோப்பாவிற்கு சென்று அங்குள்ள பல பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.