அம்மாவாகிறார் சமந்தா!

சமந்தா 70 வயது பாட்டி வேடத்தில் நடித்து வரும் தெலுங்கு படம் ஓ பேபி எந்த சக்ககுன்னவே. மிஸ் கிரான்னி என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.

தனது வயதை மீறிய மெச்சூரிட்டியாக இந்த படத்திற்காக 20 வயது, 70 வயது என்ற இரண்டுவிதமான கேரக்டர்களின் நடிப்பை பிரதிபலித்து வருகிறார் சமந்தா. அதோடு அவருக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு மகன் கேரக்டரும் இந்த படத்தில் உள்ளதாம். இந்த வேடத்தில் அல்லு சிரிஷ் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வேடத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராவ் ரமேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளளன.