சாய்பல்லவி எதிர்பார்க்கும் மாரி-2 !

ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, தற்போது சூர்யாவின் என்ஜிகே, தனுஷின் மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ஜிகேவில் ராகுல்பிரீத் சிங்குடன் இணைந்து இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக
நடிக்கும் அவர், மாரி-2வில் சிங்கிள் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார் சாய் பல்லவி. அவர் ஆட்டோ டிரைவராக நடிக் கும் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், காக்கி சட்டை அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மலை மற்றும் மூக்குத்தி அணிந்த கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார் சாய் பல்லவி. அதோடு அவரது கேரக்டரின் பெயர் அராத்து ஆனந்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தியா படம் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்க கொடுக்காத நிலையில் இந்த படம் தன்னை தமிழில் பேச வைக்கும் படமாக இருக்கும் என்று எதிர் பார்க்கிறார் சாய் பல்லவி.