மீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி!

திரைப்படம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியமோ அதேபோல்தான் திரை நட்சத்திரங்களின் பட அனுபவங்கள் மற்றும் அவர்களை பற்றிய ஆச்சர்யமான விஷயங்களை பற்றி கேட்டறிவதும் சுவாரசியம் தான்.. அதிலும் அவற்றை சம்பந்தப்பட்ட திரை நட்சத்திரங்களே பகிர்ந்து கொள்வது கூடுதல் சுவாரசியம்.

அப்படி ஒரு சுவாரசிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வரும் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இதற்குமுன் சிம்பு, ஆர்யா, ஆரி, நகுல், விஜய்சேதுபதி இயக்குனர்கள் ஹரி, பொன்ராம் என மக்கள் மனம் கவர்ந்த எண்ணற்ற திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெற்று தங்கள் திரை அனுபவங்களை  கலகலப்பாக பகிர்ந்துள்ளனர்.

வாரம் ஒரு நட்சத்திரம் என ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெரும் நட்சத்திரங்கள்  திரையுலகில் தனது தொடர் வெற்றியின் ரகசியம் தனது  அவதாரம் என பல விஷயங்களை சுவைபட பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்  நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள். 

இந்த நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம் என்று சொன்னால், பாடகர் மற்றும் பிரபல தொகுப்பாளனியான பிரியா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான். நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ள பிரியா மகாலட்சுமி, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியின் மூலம் அசத்தலாக மறு பிரவேசம் செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்..