பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குநர் பாக்யராஜ் ராஜினாமா செய்துக் கொள்வதாகவும், அதற்கான அறிக்கையும் காலை வெளியிட்டார். 

சமீபத்தில் எழுந்த சர்கார் பிரச்னையின் தனக்கு நிறைய அசெளகரியங்கள் ஏற்பட்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரின் ராஜினாமாவை ஏற்கமுடியாது என தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. பாக்யராஜ் ராஜினாமா செய்துக் கொள்வதாக செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.