நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்!

தென்றல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த வர் நிலானி. இவர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றபோது ஒரு வீடியோவில் தனது அனுதாபத்தையும், எதிர்ப்பினையும் தெரிவித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது சீரியலில் நடித்த போலீஸ் உடையோடு அவர் அந்த வீடியோவில் தோன்றியதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அது போலீஸ் அல்ல, சீரியல் நடிகை நிலானி என்று தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக காந்தி லலித்குமார்  என்பவருடன் பழகி வந்துள்ளார் நிலானி. அதேசமயம் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று நிலானியிடம் தகராறு செய்துள்ளார் காந்தி லலித்குமார்.

அதனால் காந்தி லலித்குமார்  தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி வருவதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் நிலானி. அதையடுத்து அவரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில், நேற்று சென்னை கே.கே.நகரில் தனது உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் காந்தி லலித்குமார்.

அதனால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த செய்தி சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த காந்தி லலித்குமார் உதவி இயக்குனராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.