ஆசிய  விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா!

அண்மையில் இந்தோனேசிய நாட்டின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் டேபிள் டென்னிஸில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்  16-9-2018 அன்று பாராட்டு விழா நடைபெற்றது.

டேபிள் டென்னிசில் ஆடவருக்கான குழு பிரிவில் அச்சந்த சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், அந்தோனி அமல்ராஜ் அடங்கிய குழு வெண்கலப்பதக்கம் வென்றது. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் அச்சந்த சரத் கமல் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர்களுக்கான பாராட்டு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சாதனை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக வேலம்மாள் வித்யாலயா பள்ளி நிர்வாகம்  ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிப்பாராட்டியது. அப்போது பள்ளி மாணவர்கள் வரைந்த வீரர்களின் ஓவியங்கள் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு  விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன.