பிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்

கடந்த 80 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன்-2. கமல் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி முதல் பாகத்தைப்போன்று பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்த குணசேகர் என்பவர் நேற்று இரவு இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த தில் படுகாயமடைந்தார். அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன குணசேகர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.