ஜி.வி.பிரகாஷின் ஜெயில் பர்ஸ்ட்லுக் வெளியானது!

சித்தார்த்- பிருத்விராஜ் நடித்த காயவியத்தலைவன் படத்தை அடுத்து வசந்தபாலன் இயக்கி வரும் படம் ஜெயில். வெயில் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த ஜி.வி.பிரகாஷை இந்த படத்தின் நாயகனாக்கியிருக்கிறார். தனது ஒவ்வொரு படங்களிலுமே சமூகத்தில் நடக்கும் அவலங்களை பதிவு செய்யும் வசந்த பாலன், இந்த படத்தில் ஹவுசிங்போர்டில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்வியலை படமாக்குகிறார்.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த ஜெயில் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. அதில் கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் ஒரு குற்றவாளி கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.