ரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா?

அரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாமல் முழுநேர மக்கள் சேவையில் கண்ணை மூடிக்கொண்டு இறங்கி விட வேண்டும் என்பார்கள். ஆனால், தற்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினியும், கமலும், அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டு, தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சினிமாவில் அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் இந்த அரசியல் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. அதாவது, மழை வரும்போதுதான் கலப்பையை கையில் எடுப்போம் என்பது போல் உள்ளது இவர்களின் அரசியல் பிரவேசம். மக்கள் ஏற்றுக்கொண்டால் அரசியலை தொடருவோம், இல்லையேல் மீண்டும் சினிமாவை தொடருவோம் என்கிறார்கள்.

அந்த அளவுக்கு அரசியலை விளையாட்டுத்தனமாக ரஜினி, கமல் ஆகிய இருவரும் கருதுவதாக சில முக்கிய அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகிறார்கள். மேலும், இவர்கள் இப்படி பகுதி நேர அரசியல் செய்தால், எந்தக்காலத்திலும் இவர்கள் வெற்றிபெற முடியாது என்கிறார்கள்.

ஆனபோதும், எந்தவித விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காமல், நாங்கள்தான் அடுத்த எம்ஜிஆர் என்பது போன்று ரஜினியும், கமலும் காலரை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். பகுதி நேர அரசியல் இவர்களுக்கு கைகொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.