நரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த இளவட்ட நடிகர்களான பிருத்விராஜ், துல்கர்சல்மான், பகத்பாசில், நிவின்பாலி என பல நடிகர்கள் வந்தபோதும், அவர்களால் தமிழில் ஒரு நிலையான மார்க்கெட்டை இன்னமும் பிடிக்க முடியவில்லை. இவர்களில்  பிரித்விராஜ் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தவில்லை.

இந்த நிலையில், தற்போது மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வரும் பிருத்விராஜின் அண்ணனான இந்திரஜித். நரகாசூரன் படத்தில் தமிழுக்கு வந்துள்ளார். மலையாளத்தில் போலீஸ் வேடங்களாக நடித்து வரும் அவருக்கு கார்த்திக் நரேனும் ஒரு போலீஸ் வேடம்தான் கொடுத்துள்ளார்.  ஆனால் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்  என்பதால் தனக்கு இந்தபடம் தமிழில் ஒரு நல்ல என்ட்ரி கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார் இந்திரஜித். அதோடு தமிழில் தான் நீடிக்க வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.