மருத்துவ ஆராய்ச்சியில் இளையராஜாவின் பாடல்கள்!

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரு சாதனை செய்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் உருவான திரைப்பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் அனைத்துமே ராகங்களின் அடிப்படையில் உருவானவை. அதோடு, வாத்தியக்கருவிகளால் இசையமைக்கப்பட்டவை.

அதனால்தான் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அதோடு, கர்நாடக சங்கீத ராகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. அதனால் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களுக்கு நோய்களை குணப்படுத் தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

அதன்காரணமாக, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இளையராஜாவின் சினிமா பாடல்கள் மற்றும் ஆல்பங்களை ஆராய்ச்சி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். அதோடு, இந்த ஆராய்ச்சிக்கு தன்னிடமிருந்த மேலும் சில இசைக் கோர்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறாராம் இளையராஜா.

ஆக, இளையராஜாவின் இசைப்பாடல்கள் என்னென்ன நோய்களை தீர்க்கும் அருமருந்தாகப்போகிறது என்பது விரைவில் தெரிந்து விடும்.