கஸ்தூரியை ஏமாற்றிய தயாரிப்பாளர்கள் !

தனது இணைய பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி, சமீபத்தில் வெளியான தமிழ்ப் படம்-2வில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த படத்துக்கே அந்த பாடல்தான் மைனஸ் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இப்படி ஒரு உடம்பை வைத்துக்கொண்டு இதெல்லாம் தேவையா என்றும் அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் அந்த விமர்சனத்துக்கு இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை கஸ்தூரி.

இந்நிலையில், இணைய தளத்தில் ரசிகர் ஒருவர், நீங்கள் சினிமாவில் வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்ப்பு செய்யாமல் ஒழுங்காக கட்டுகிறீர்களா? என்று அவரிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, நான் ஒருபோதும் வரி ஏய்ப்பு செய்ததில்லை. ஆனால் என்னிடம்தான் பேசினபடி சம்பளம் தராமல் பலர் என்னை ஏய்த்து எனக்கு நாமம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.