கீர்த்தி சுரேஷ்க்கு பாடம் நடத்திய விக்ரம்!

ஹரி இயக்கத்தில் சாமி படத்தை அடுத்து இப்போது சாமி-2வில் இணைந்துள்ளார் விக்ரம். முதல் பாக கதையின் தொடர்ச்சி என்பதால் சாமியில் நடித்த விக்ரம் இப்போது அப்பாவாகி விடுகிறார். கதைப்படி திருமணம் செய்து கொண்ட விக்ரம்-திரிஷாவிற்கு பிறந்த மகனாக இன்னொரு இளவட்ட விக்ரமும் நடிக் கிறார்.

ஆக, இந்த படம் இளம் விக்ரமை சுற்றிய கதையில்தான் பின்னப்பட்டுள்ளது. வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். ஹா¢யின் வழக்கமான பாணியில் அனைத்து வகையான ரசங்களும் கலந்த கமர்சியல் கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது.

இந்த படத்தில் விக்ரமுடன் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த படத்தில்தான் நான் அறிந்தேன். காரணம், தான் மட்டுமே நடிப்பில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. மாறாக, தன்னுடன் இணைந்து நடிக்கும் அனைவருமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதற்காக அவர் மற்றவர்களுக்கு நடிப்பை சொல்லிக்கொடுக்கிறார். அப்படி எனக்கும் பல காட்சிகளில் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதனால் என் கண்களுக்கு அவர் ஒரு கதாநாயகனாக தெரிந்ததை விட ஒரு டீச்சராகத்தான்தெரிந்தார் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.