விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் கரகாட்டம்!

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் இரண்டுவிதமான மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கிறார் அஜீத்குமார். அவருடன் நயன்தாராவும் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி வருகிறது.

அதனால் இந்த படம் காதல், காமெடி, செண்டி மென்ட், ஆக்சன் என பல விசயங்களையும் கலந்து படமாக்கப்படுகிறது. அதோடு, இந்த படத்தில் ஒரு திருவிழா பாடலும் உள்ளதாம். அந்த பாடலில் கரகாட்ட குழுவினருடன் இணைந்து தானும் நடனமாடியிருக்கிறார் அஜீத்.

டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்த கரகாட்டப்பாடல் படம் வெளியாகும்போது பட்டிதொட்டி யெல்லாம் கலக்கும் என்கிறார்கள்.