விஜய்யுடன் மோதிய வியட்நாம் நடிகர்!

சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்தவர் வியட்நாம் நடிகர் ஜானி டங்கிலி. இவரை தற்போது விஜய் நடிப்பில் தான் இயக்கி வரும் சர்கார் படத்திலும் வில்லனாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏழாம் அறிவு படத்தை விடவும் சர்காரில் அவரை அதிரடியான வில்லனாக்கியிருக்கும் முருகதாஸ், விஜய்யுடன் ஒரு அதிரடி சண்டை காட்சியிலும் மோத விட்டுள்ளார். அந்த சண்டை ஒரு சண்டை காட்சியை ஒரு வாரத்திற்கும் மேலாக படமாக்கியிருக்கிறார்.

அதோடு, இது படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சி என்பதால், ஒரு டிரைனர் மூலம் தனது உடல்கட்டை இன்னும் சீரமைத்து அவருடன் கோதாவில் குதித்துள்ளார் விஜய்.