ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்

ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

ஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா.

கப்பல் படம் புகழ் சோனம் பாஜ்வா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறாராம்.