வெங்கட்பிரபு படத்தில் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரது சண்டை காட்சிகளைப்பார்த்து ரசிப்பதற்கென்றே இளவட்ட ரசிகர்கள் ஏராளமானோர் அவர் நடித்த படங்களை பார்க்க செல்வார்கள். அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் ஆவேசமாக நடிப்பார் கேப்டன்.

ஆனால் முழுநேர அரசியலில் பிரவேசித்த பிறகு சில டைரக்டர்கள் நடிப்பதற்கு அழைத்தும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் படத்தில் ஆடியோ விழா சென்னையில் நடந்தது. அப்போது சண்முகப்பாண்டியனை வாழ்த்த வந்திருந்த டைரக்டர் வெங்கட்பிரபு, கேப்டன் நடித்த படங்களுக்கு நான் ரசிகன் என்று பேசினர்.

அதோடு, சண்முகப்பாண்டியனின் இந்த மதுரவீரன் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். இந்த படம் அவருக்கு பொ¢ய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

மேலும், உன்னைச்சரணடைந்தேன் படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்தவர் டைரக்டர் சமுத்திரகனி. அதன்பிறகு நான் இயக்குனராகி விட்டேன். இப்போது என் படத்தில் நடிப்பதற்குகூட அவருக்கு நேரமில்லை. அந்த அளவுக்கு பிசியான நடிகராகி விட்டார் சமுத்திரகனி.

என்றாலும் அடுத்தபடியாக நான் இயக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும்எ ன்பது எனது ஆசையாக உளளது.

அதேபோல் கேப்டன் விஜயகாந்தையும் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மதுரவீரன் படத்திற்கு பிறகு சண்முகப்பாண்டியன் பெரயி நடிகராகி விடுவார். அதனால் விரைவில் அவரை வைத்து நான் ஒரு படம் இயக்குவேன். அந்த படத்தில் கேப்டன் விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .

இவ்வாறு வெங்கட்பிரபு பேசினார். அதைக்கேட்டு அவரது இந்த வேண்டுகோளை தான் ஏற்றுக்கொள்வது போன்று மேடையில் அமர்ந்திருந்த கேப்டன் விஜயகாந்த், ஒரு சிரிப்பை அவருக்கு பதிலாக கொடுத்தார். ஆக, கூடிய விரைவிலேயே சண்முகப்பாண்டியன் நாயகனாக நடிக்கும் படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.