கொதித்தெழுந்த தல அஜித்!

தமிழ் சினிமாவின் இன்று முன்னணி நடிகராக தல அஜித் விளங்கி வருகிறார், எந்தவொரு பேட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு என எதிலும் கலந்து கொள்வதில்லை.

ஆனால் ஒரு காலத்தில் இவர் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த போது இவருக்கு வாலி படம் மெகா ஹிட் படமாக அமைந்து அனைவரையும் கொண்டாட வைத்தது.

அப்போது ஒரு சில சேனல்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார், அந்த பேட்டியின் போது தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்ததற்கு என்ன காரணம் என நீங்க நினைக்கறீங்க என கேள்வி கேட்டனர்.

இதற்கு அஜித் தோல்விகளுக்கு நான் மட்டும் தான் பொறுப்பாவேனா? தயாரிப்பாளர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளும் கதையை கேட்டு தான் ஓகே சொல்கிறார்கள், அதனால் தோல்வியில் எனக்கு மட்டும் தான் பங்கு என எப்படி கூற முடியும் என கூறியுள்ளார்.