கோச்சடையான் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்!

koci-647x450ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேசன் படம் கடந்த 9-ந்தேதியே ரிலீசாக இருந்தது. ஆனால், தற்போது மே 23-ந்தேதிக்கு மாற்றியுள்ளனர். இதறகு காரணம், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படம் பெரிய அளவில் ஓடாது என்று நினைத்து ஏற்கனவே தங்களுக்கு விற்ற தொகையை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, கோச்சடையானை தயாரித்துள்ள ஈராஸ் நிறுவனம் இந்த படத்துக்காக வங்கியில் ரூ. 40 கோடி கடன் வாங்கியுள்ளதாம். அதனால், அந்த பணத்தை வங்கிக்கு செலுத்திய பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று வாங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பி விட்டார்களாம்.

அதோடு, பணத்தை செலுத்த 15 நாட்கள் தவணையும் கொடுத்துள்ளார்களாம். அதனால்தான் அதற்குள்ளாக படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்களிடம் வசூலித்து அந்த தொகையை செலுத்தி விடுவதாக ஈராஸ் நிறுவனம் வங்கிக்கு வாக்குறுதி அளித்துள்ளதாம்.