லட்சுமிராய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி!

rajini-life-cbse-syllabusரஜினிகாந்த் அத்னை எளிதில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாட்டார். தன்னுடன் நடித்தவர்களாக இருந்தாலும் நன்றாக பழகினவர்களுக்குத்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்வார். சில சமயங்களில் அவர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.

அப்படிப்பட்ட ரஜினிகாந்த், தனக்கு பெரிய அளவில் பழக்கமில்லாத நடிகை லட்சுமிராய்க்கு சமீபத்தில் திடீரென்று போன் போட்டு பிறந்த நாள் வாழ்த்து சென்னாராம. தனது பிறந்த நாளை தெரிந்து கொண்டு அவர் போன் செய்ததை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள லட்சுமராய், சூபபர் ஸ்டாரே தனக்கு வாழ்த்து சொன்னதை தனது தென்னிந்திய ந்ணபர்கள் அனைவரிடக்கும் தகவல் அனுப்பி விட்டார்.

அதோடு, இதுவரை எத்தனையோ பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேன. ஆனால் இந்த பிறந்த நாளில் சூப்பர் ஸ்டாரே என்னை வாழ்த்தியதால் இது எனக்கு ஸ்பெசலான ஆண்டாக அமையப்போகிறது என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் லட்சுமிராய்.