சிம்புவை கட் பண்ணி விட்டு ஆர்யாவுடன் ஐக்கியமான ஹன்சிகா!

arya-and-hansika-romance-in-goaவாலு படத்தில் நடிககத் தொடங்கியபோது சிம்புவுடன் காதல் வளர்த்தார் ஹன்சிகா. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. அதனால், அப்படத்தில் யுஆர் மை டார்லிங் என்றொரு ரொமான்ஸ் பாடலில் ஹன்சிகாவை சிம்புவுடன் நடிக்க வைக்க படாதபாடு பட்டனர். ஒருவழியாக நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் செய்த பிறகு அதில் நடித்துக்கொடுத்தார் ஹன்சிகா.

ஆனால், இப்போது சேட்டை படத்திற்கு பிறக ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் நடித்து வரும் ஹன்சிகா அவருடன் ஏறகனவே உறவாடி வந்தவர் இப்போது இன்னும் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் அவருடன் கொஞ்சி குலாவிக்கொண்டேயிருக்கிறாராம். சில நாட்களில் இரவு படப்பிடிப்பு நடந்தால் ஆர்யாவின் தோளில் சாய்ந்தபடியே குட்டித்தூக்கம் போடுகிறாராம் ஹன்சிகா.

இந்த விவகாரம் சிம்புவின் காதுக்கு செல்ல, அவர்கள் குட்டித்தூக்கம் போட வேண்டுமென்றால்தான் கேரவனுக்குள்ளேயே போடலாமே. இது என்னை வெறுப்பேத்துவதற்காக செய்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வந்த கனெக்சன் இது. அதனால்தான் என்னை காதலிக்கும்போது என்னுடன் காட்டிய நெருக்கத்தைவிட இப்போது ஆர்யாவுடன் ஓவர் நெருக்கத்தை காட்டுகிறார் ஹன்சிகா என்று தனது எரிச்சலை காட்டுகிறார் சிம்பு.