சிம்புதேவனுக்கு சிக்னல் கொடுத்த விஜய்!

sibuகத்தி படத்தில் டபுள் ரோலில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது. அப்படத்தில் ஸ்ருதிஹாசன், தீபிகாபடுகோனே ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நான்ஈ படத்தில் நடித்த கன்னட நடிகர் சதீப் வில்லனாக நடிக்கிறார்.

இப்படம் குறித்த செய்தியைப்பற்றி சமீபத்தில் சிம்புதேவனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. கத்தி படப்படிப்பு முடிந்தால்தான் விஜய் சார் என் படத்தில் நடிப்பது பற்றியே தெரிய வரும் என்றார். ஆனால், தற்போது விஜய் கத்தி படத்தை 75 சதவிகிதம் முடித்து விட்டதால், அடுத்து சிம்புதேவனுக்கு சிக்னல் கொடுத்து விட்டாராம்

இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள சிம்புதேவன், அடுத்தகட்ட வேலைகளில் உற்சாகமாக இறங்கிவிட்டார்.