அஜீத்தின் புதிய படம் சத்யதேவ்!

540x300xAjith-55th-Movie-Ajith-and-Gautam-Menon2.jpg.pagespeed.ic.Z1w0E0ufKXவீரம் படத்தையடுத்து அஜீத் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான டைட்டில் குறித்த செய்தியை அறிவிக்கவில்லை. அதனால் அஜீத்தின் 55வது படம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போது அப்படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டரின் பெயரையே படத்திற்கும் வைப்பதற்கு முடிவெடுத்திருக்கிறாராம் கெளதம்மேனன். அதனால் அஜீத் நடிக்கும் சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரியின் பெயரை வைப்பதற்கு தற்போது முடிவு செய்து விட்டாராம். இந்த தலைப்பு அஜீத் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்கும் ரொம்ப பிடித்து விடடதாம்.

அதனால் சமீபகாலமாக எந்தவொரு விசயமாக இருந்தாலும் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து செய்து வரும அஜீத், ஒரு நல்ல நாள் பார்த்து சத்யதேவ் என்ற தலைப்பினை வெளியிடுமாறு கெளதம்மேனனிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.