இயக்குனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! -உஷார்படுத்தும் கே.பாக்யராஜ்

Producer_M_Ramanathan_Daughter_Wedding_Photos6b1968688ffb9d2600e6bc98ee63ba4aமீண்டும் அம்மன் பாடல் வெளியீட்டு விழாவில்  கே.பாக்யராஜ் பேசியதாவது:- “டி.பி.கஜேந்திரன் இப்போ ஃப்ரீயா இருக்கேன். நிறைய படம் பார்க்குறேன் சான்ஸ் வரலேன்னு சொன்னார். இந்த நேரத்துல எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது. சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு தெலுங்கு படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன்.

அப்போது ஒரு தெலுங்கு புரட்யூசர் என்னை பார்க்க வந்திருந்தார். நான் தமிழ்ல ரிலீசான ஒரு படத்தை தெலுங்குல எடுக்கப்போறேன். அதுல நீங்க நடிக்கணும்னு சொல்லி அந்த படத்தோட சிடியை என்கிட்ட கொடுத்துட்டு போனார். அதுல இயக்கம் டி.பி.கஜேந்திரன்னு போட்டிருந்துச்சு. இந்த படத்தை நாம எப்படி பார்க்காம மிஸ் பண்ணினோம்னு வீட்டுல போயி படத்தை போட்டு பார்த்தேன். படம் போக போகத்தான் தெரிஞ்சுது. அது என்னோட கதை. ஒரு டி.வி.தொடருக்காக நான் எழுதியிருந்த கதை. அதை யாரோ ஒருத்தர் திருடிக் கொண்டுபோய் டி.பி.கஜேந்திரன்கிட்ட கொடுதிருக்கான். கஜேந்திரனை குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. எச்சரிக்கையா இருக்கணுங்குறதுக்காக சொல்றேன். இனிமே யாராவது கதையோடு வந்தால் ஏம்ப்பா இது உன்னோட கதையா இல்ல வேற யாராவது எழுதினதான்னு கேட்டுக்குங்க” என்றார்.