மிஷ்கின் இயக்கும் பிசாசு!

mishkinஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்து டைரக்டர் பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனத்துக்காக பிசாசு என்ற படத்தை இயக்கிறார். சாதாரணமாக எந்த இயக்குனர்களிடம் கதை கேட்டாலும் அதுகுறித்து பெரிய அளவில் இம்ப்ரஸ் ஆகாத பாலாவை, மிஷ்கின் சொன்ன கதை ரொம்பவே ஈர்த்து விட்டதாம்.

அதன்காரணமாகவே அநத படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறார். தற்போது சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை என்ற கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையை பதிவு செய்து கொண்டிருக்கும் பாலா, வருகிற 14-ந்தேதி பிசாசு படத்தை மிஷ்கினை ஆரமபிக்குமாறு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அதனால் கடந்த சில மாதங்களாக அவரது ஆர்டருக்கு காத்துக்கொண்டிருந்த மிஷ்கின், தற்போது பரிவாரங்களுடன் படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.