பிரபுசாலமன் குடும்பத்தாருடன் இஸ்ரேல் பயணம்

14mp_prabhu_solomo_1297637gமைனா, கும்கி என வெற்றிப்படங்களை அடுத்து பிரபுசாலமனின் “கயல்” படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வழங்க காட் பிக்சர்ஸ் “கயல்” இந்த படம் தொழில்நுட்பத்தில் உயரிய படமாக வளர்த்து வருகிறது.

முழு படப்பிடிப்பையும் முடித்து விட்ட திருப்தியில் உள்ளார் பிரபுசாலமன். தனது வாழ்நாள் கனவாக பிரபுசாலமன் நினைத்திருந்த விஷயம் இப்போதுதான் கைகூடுகிறது. இயேசு பிறந்த ஊருக்கு தன் குடும்பத்துடன் சென்று வருவதுதான் அவரது லட்சியம். அதற்காக இம்மாதம் எட்டாம் தேதி குடும்பத்தாருடன் இஸ்ரேல் செல்கிறார்.

இயேசு பிறந்த இடமான பெத்தலகாம், அவர் வளர்ந்த இடமான நாசரேத், சிலுவையில் அறையப்பட்ட கொல்கத்தா மலை, ஞானஸ்தானம் பெற்ற ஜோடான் நதி,பத்து கட்டளைகள் பெற்ற சீனாஸ் மலை போன்ற இடங்களில் பிரார்த்தனைகளை முடித்து விட்டு பதினேழாம் தேதி சென்னை திரும்புகிறார்.

அவருடன் 60 பேர் கொண்ட நண்பர்கள் குழுவும் இஸ்ரேல் செல்கிறது.

இன்று பிரபுசாலமனுக்கு பிறந்தநாள்.