தனுஷ் ஒரு பச்சோந்தி!

8165_thumb_665தனுஷ் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு பச்சோந்தி’ என இயக்குநர் கெளதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கும் அவர்,தனுஷை வைத்து இயக்கியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக உள்ளார்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,தனுஷ் மற்றும் சிலம்பரசன் ஆகியோரின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“தனுஷ் ஒரு பச்சோந்தி.எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ,அதற்கேற்றவாரு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை தனுஷிடம் இருக்கிறது.சிம்புவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர்தான்.ஆனால் சில நேரங்களில் அவரின் கவனம் கதாபாத்திரத்தில் இருந்து சிதறிவிடும்.இதற்கு காரணம் சிறிய வயதில் இருந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கு அலுத்துவிட்டது.அவரின் திறமைக்கு தீனி போடும் வகையில்,ஒரு நல்ல ஆக்‌ஷன் திரைப்படம் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.”என கெளதம் மேனன் இரு நாயகர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார்.

பல மனக்கசப்புகள் இருந்தாலும் தற்போது வரை சூர்யா தனக்கு நல்ல நண்பர்தான் எனவும்,கூடிய விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தின் பணியாற்றக்கூடிய சூழல் ஏற்படும் எனவும் கெளதம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.