கே.வி.ஆனந்த் பட தலைப்பு கவண்!

unnamed-5கதிர் இயக்கிய காதல் தேசம், ஷங்கர் இயக்கிய முதல்வன், சிவாஜி உள்பட பல மெகா படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். பின்னர் கனா கண்டேன் படத்தில் இயக்குனரான அவர், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன் என பல படங்களை இயக்கினார். அந்த வகையில், சூர்யா, தனுஷ், ஜீவா, ஸ்ரீகாந்த் போன்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய கே.வி.ஆனந்த், தற்போது டி.ராஜேந்தர், விஜயசேதுபதியை வைத்து கல்பாத்தி அகோரம் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கி வருகிறார்.

வழக்கமாக அவரது படங்களுக்கு கதை எழுதும் இரட்டையர் சுபாவே இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக் கும் இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியன் நடிக்க, டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எப்போதுமே தனது படங்களுக்கு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு வித்தியாசமான தலைப்பு வைத்து வரும் கே.வி.ஆனந்த், இப்படத்திற்கு கவண் -என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் அப்படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.

Tags- k.v.anand, vijayasethupathy, kavan.

கே.வி.ஆனந்த், விஜயசேதுபதி, கவண்.

Reviews

  • Song2
  • lyrics3
  • Story5
  • Background Music2
  • Artist7
  • 3.8

    Score