32 வயதை தொட்ட குஜராத் குதிரை நமீதா!

Actress Namitha Hot Pics in Midathaகுஜராத் குதிரை நமீதாவுக்கு இன்று (மே 10ம் தேதி) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தவர் நடிகை நமீதா. 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில், நான்காம் இடம் பெற்ற நமீதா, விஜயகாந்த்தின் ”எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தனது கவர்ச்சியான நடிப்பால் தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்டார் நமீதா. மேலும் ‘மச்சான்ஸ்’ என்ற ஒரே வார்த்தையால் தமிழக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் இவர். தற்போது சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக கடை திறப்பு விழா, சினிமா விழாக்கள், டி.வி. நிகழ்ச்சியில் நடுவர் என்று தன்னை எப்போதும் அடையாளம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நமீதா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.