24 ஆம் தேதி வெளி வருகிறது ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்!

24JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளிவருகிறது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் எனபதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

“ ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அருள்நிதி நடிப்பில் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளி வர உள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு முழுநீள காமெடி திரைப்படம் ஆகும். ஆகவே நிச்சயம் இந்தப் படம் மக்களை மகிழ்வித்து வணிக ரீதியிலும் பெரிதும் வெற்றி பெரும்” எனக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதிஷ்.